ADDED : ஜூன் 03, 2010 03:23 AM
கோபிசெட்டிபாளையம்: ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகளில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசு வழங்கும் விழா சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கோபி கிளையில் நடந்தது.
ப்ளஸ் 2 தேர்வில் 1,157 மார்க் பெற்ற ஸ்ரீ வித்யாலயா பள்ளி மாணவி அபர்ணா, 1,095 மார்க் பெற்ற கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி கார்த்திகேயன், 1,047 மார்க் பெற்ற கோபி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சங்கீதா, 938 மார்க் பெற்ற கோபி நகராட்சி ஆண்கள் பள்ளி ராஜேஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 483 மார்க் பெற்ற கோபி வைரவிழா பள்ளி சேதுராமன், 458 மார்க் பெற்ற நகராட்சி பெண்கள் பள்ளி மோகனா, 414 மார்க் பெற்ற நகராட்சி ண்கள் பள்ளி தம்ஜீத் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. வங்கி கிளை மேலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வைரவிழா பள்ளி தாளாளர் தட்சினாமூர்த்தி, ஸ்ரீ வித்யாலயா பள்ளி ஆசிரியை சுகந்தி, ஆடிட்டர் சாய் மாரியப்பன், தி.மு.க., வார்டு செயலாளர் சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.